இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வழங்கும் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதன்படி, இன்று அறிவிக்கப்படவிருந்த தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இராஜாங்க அமைச்சரைப் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி சமூக ஆர்வலரான, ஓஷல ஹேரத் என்பவரால் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இராஜாங்க அமைச்சர் பிரித்தானிய பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதால், அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனக் ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.