மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் அலி சப்ரிக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்!

இந்தியாவையும் புலம்பெயர் அமைப்புக்களையும் புறக்கணித்து விட்டு ஈழம் பற்றி பேச முடியாது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயுத கலாசாரத்தை தோற்றுவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக நாடளுடன்றம் ஊடாக கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் நீதி, நியாயம் குறித்து பேசும் ஓர் இனம் அடக்குமுறைக்கு உள்ளாகுவது சர்வ சாதாரணம்.

ஆனால் வெளிவிவகாரத்துறை அமைச்சர்  நாங்கள் மீண்டும் துப்பாக்கிகளை எடுப்போம். நீங்கள் மௌனமாக இருங்கள் என பலவந்தமான முறையில் கருத்து வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது எனவம் தெரிவித்துள்ளார்.

ஆயுத கலாசாரம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அலி சப்ரி போன்றோருக்கு முதலில் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும், இன நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் கற்றுக்கொடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்கள் தமிழ் மக்களின் உரிமைகள், பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் அவ்வாறனவர்களை புறக்கணிக்கமுடியது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகள் ஆயுதங்களை விரும்பி ஏந்தவில்லை. ஆனால் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியின் கருத்து, “நீங்கள் துப்பாக்கி தூக்குங்கள்” என்பது போல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அலி சப்ரி மீண்டும் ஒரு யுத்தத்துக்கு அவர் வழிவகுக்கிறார் எனவும் சுட்டிக்கட்டியுள்ளார்.

அறவழியில் போராடிய தமிழர்களை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் எனத் தெரிவித்து, அறவழி போராட்டத்தை பாரிய யுத்தமாக மாற்றியமைத்தார்.

தற்போது, ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார். இந்த நாடு எதை நோக்கி செல்கிறது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply