பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பாகிஸ்தான் புதிய முயற்சி

பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவில் உள்ள தமது நாட்டுக்குச் சொந்தமான ரூஸ்வெல்ட் விடுதியை நியூயோர்க் நகர நிர்வாகத்திற்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.

தமது நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே பாகிஸ்தான் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதி, 100 ஆண்டுகள் பழைமையானதோடு,1250 அறைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும், 220 மில்லியன் டொலருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் பாகிஸ்தான் அரசுக்கு 1,817 கோடி ரூபா வருமானம் கிடைக்கும் எனவும், 3 ஆண்டுகள் குத்தகை முடிந்ததும், பாகிஸ்தான் அரசிடம் குறித்த விடுதி மீள ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply