கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்.
இதனையடுத்து, உதவி நிறுவனங்கள் தமக்கு உதவத் தவறிவிட்டதாக ஜெலென்ஸ்கி, நேற்று குற்றம் சாட்டினார்.
மேலும், ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ சர்வதேச அமைப்புக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த தாக்குதலையடுத்து, மீட்பு முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும், நூறாயிரக்கணக்கான மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனையடுத்து உக்ரேனிய இராணுவம் அவர்களுக்கு உதவி வருகின்றது.
குறித்த தாக்குதலானது திட்டமிட்டு வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.