பெண் உறுப்பினர்கள் தமது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கடந்த நவம்பர் மாதம் இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஒரு வயது நிரம்பிய மகனை நாடாளுமன்றிற்கு அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, குறித்த பெண் உறுப்பினரின் மகன் திடீரென அழுதுள்ள நிலையில், .நாடாளுமன்றம் அமைதியானது. பின்னர் குறித்த பெண், தன் குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் பதிவாகி, வைரலாகியுள்ளதுடன் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.