டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இன்று காலை இரண்டு பயணிகள் விமானங்கள் மோதியதில் , அதன் நான்கு ஓடுபாதைகளில் 3,000 மீற்றர் நீளமுடைய ஓடுபாதை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டதாக ஜப்பானிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 11 மணியளவில் நடந்த சம்பவத்தில் யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படாததோடு, விமானம் ஒன்றின் ஒரு இறக்கை மட்டும் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மூடப்பட்ட ஓடுபாதை சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.
குறித்த இரு விமானங்களிலும் 260 பயணிகளும் 200 பணியாளர்களும் இருந்ததாக நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்படுவதற்கு காத்திருந்த நேரத்திலே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாய் ஏர்வேஸ் விமானம், ஈவா ஏர்வேஸ் விமானத்தை கடந்து சென்றபோது இரண்டு விமானங்களும் ஒன்றையொன்று உரசியிருக்கலாம் என ஜப்பான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.