ரணிலின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவப் பொறுப்புச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின்படி, நிதி அமைச்சர் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு நிறைவடைவதற்கு 5 மாதங்களுக்கு முன்னர் இந்த அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, தேசிய ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நிலை அறிக்கை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply