இலங்கையில் விவாதத்திற்குள்ளாகியுள்ள ரஷ்யாவின் திட்டம்!

இலங்கையில் அணுமின் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின், ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் நிலவும் எரிசக்தி பற்றாக்குறை பிரச்சினையை அணுசக்தியால் மட்டுமே தீர்க்க முடியும் எனவும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த அணு மின்சார உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்டாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply