காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச எல்லையான குப்வாராஜுமகுந்த் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு படை பொலிஸார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நீண்ட நேரம் இருதரப்பினருக்கும் இடையில்,  பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

அவர்கள் ஏன் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என இது வரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்காக பதுங்கி இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அப்பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply