சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம் நினைவேந்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆயுதப் போராட்டம் 2009இல் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போதும் சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தனது கோரமுகத்தை தமிழர்கள் மீது காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தமிழர்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள குறுகிய அரசியல் நலன்களை புறந்தள்ளி, வருங்கால சந்ததிக்காக சிறந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் உதவியோடு தமிழ் இனத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.