சிறிலங்கா கிரிக்கெட் கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அங்கத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த கணக்கறிக்கை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் சிறிலங்கா கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இது 2021 ஆம் ஆண்டு மொத்த வருமானத்தை விட 120 சதவீத வளர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் சிறிலங்கா கிரிக்கெட் பதிவு செய்த 6.3 பில்லியன் ரூபா உபரியானது வரலாற்றில் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் வருடாந்த ஒதுக்கீடுகள் இந்த வருமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.