தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுமளவிற்கு கருணா வைத்திய நிபுணர் அல்ல!

இலங்கையின் 75வது சுதந்திர தினம் தமிழரின் கரி நாள் என பிரகடனப்படுத்தி, வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை இன்றைய தினம் மூன்றாது தடவையாக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இன்றை வழக்கு விசாரணையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மட்டுமே நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். வழக்குடன் தொடர்புடைய ஏனையவர்கள் முன்னியாகியிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஏனையவர்கள் முன்னிலையாகாதமை தொடர்பில் நீதிபதி கேள்வியெழுப்பியதோடு, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரண தொடர்பிலும் தலைவர் பிரபாகரனின் மரபணு வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் சமூக, அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள் என பிரகடனப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply