தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு!

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தான் கல்வி அமைச்சராக இருந்த போது அந்த வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள நிதிப்பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் உரையின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

உயர்கல்விக்கான பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா கடன் திட்டத்தின் 2021/2022 தொகுதிக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

அதன் போது, தான் கல்வி அமைச்சராக இருந்த போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு பல தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இந்த வசதியை வழங்கியிருந்ததை நினைவு கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வது மட்டுமன்றி, தனியார் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு பெறுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது என தான் கருதுவதாகவும் அந்த வசதியை வழங்குவதற்கு நிதி அமைப்பில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் எனவும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply