சவால்களுக்கு மத்தியில் கடன் மறு சீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்துப் போராட, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தது.

குறித்த முடிவெடுத்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், தற்போது, சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதேவேளை, இலங்கையின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை பலரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இருதரப்பு கடனளிப்பவர்கள் சீனாவுக்காக காத்திருக்கும் நிலையிலும், பலதரப்பு கடன் வழங்குபவர்கள் சீனாவின் வலியுறுத்தல்களாலும், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தற்போது முட்டுக்கட்டைக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தற்போது ஒரு வார காலப் பயணமாக சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

எனினும் இதுவரையில், இலங்கையின் கடன் நிவாரணக் கோரிக்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வ வார்த்தை எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply