மியான்மாரின் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான மோச்சா சூறாவளியிலிருந்து தப்பிய மில்லியன் கணக்கான மக்களுக்கான அணுகலை அரசாங்கம் துண்டித்த பின்னர், மக்கள் தமது வாழ்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே 14 அன்று, மியான்மாரின் பல பகுதிகளை மோச்சா சூறாவளி தாக்கியதையடுத்து, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்ததோடு, பலர் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளில் உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், ஒருமாதத்திற்கு பிறகு உதவிகள் குறைந்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.போதிய குடிநீர், உணவு இன்மையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பருவமழை தொடர்வதால் மக்கள் தினமும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.மேலும், மாணவர்கள் கூரைகள் அற்ற பாடசாலையில் கல்வி கற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சேதமடைந்த வீடுகளில் ஒரு பகுதி மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.
சூறாவளித் தாக்கத்தால் 145 பேர் இறந்துள்ளதாக மியான்மார் இராணுவம் தெரிவிக்கும் அதேவேளை, இரகசிய தேசிய ஒற்றுமை அரசாங்கம் இறப்புக்களின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியதாக மதிப்பிடுகிறது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மியான்மார் இராணுவம் தடுத்துள்ள நிலையில், மியான்மார் அரசாங்கம் வெளியில் இருந்து உதவிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.