கடந்த மே மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்கள் தொடர்பில், மூத்த அதிகாரிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவம் பணி நீக்கம் செய்துள்ளது.
இராணுவ சொத்துக்களை பாதுகாக்க தவறியமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் அமைதியின்மை நிலவியது.
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியதால்,போராட்டத்தில் ஏறக்குறைய எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்திற்குப் பிறகு 5,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர், பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில், பதினைந்து அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இராணுவ நீதிமன்றங்களில் பொதுமக்களை விசாரிப்பது நியாயமற்றது என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.