தமிழகத்தின் பிரபல இந்து ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் பெரும் சர்ச்சை!

இந்தியா தமிழ் நாட்டில் இந்து ஆலயம் ஒன்றின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்துக்கள் மட்டுமே ஆலயத்திற்குள் நுழையலாம் என எழுதப்பட்ட பதாதை ஆலயத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பழனி முருகன் ஆலயத்தின் நுழைவு வாசலில் இந்துக்கள் மட்டுமே நுழையலாம் என்று பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பேசிய திருக்கோவில் விஷ்வ ஹிந்து பர்ஷத் அமைப்பாளர் அதிவாரம் செந்தில், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பல்வேறு மதத்தினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்றே இந்து ஆலயங்களிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதுமட்டுமன்றி, பழனி கோவில் சுற்றுலா தலமல்ல. நமது பூஜையை மற்ற மதத்தினர் பார்க்க விரும்பவில்லை.

முஸ்லிம் அல்லாதவர்கள் மக்காவிற்குள் நுழைய முடியாதது போலவே  இந்து கோவில்களிலும் உள்ளது.

மத ஸ்தலங்களை காட்சிப் பொருளாகப் பார்க்கக் கூடாது. இந்து கோவில்களுக்குள் புர்கா தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்து ஆலயங்களை வழிபட ஒப்புக்கொண்டால் வழிபடலாம் அதற்கு எந்த வரம்பும் இல்லை என தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

இதேவேளை, இந்துக்கள் அல்லாதவர்கள் கூட ஆலய வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது என்று கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையம் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply