கனடாவில் பரவிய காட்டுத் தீயின் புகைமண்டலம் வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 76 ஆயிரம் சதுர கிலோமீற்றர் வரை பரவிய காட்டுத் தீயினால் மிக மோசமான விளைவுகள் பதிவாகும் எனவும், காட்டுத் தீ காரணமாக 160 மில்லியன் தொன் கார்பன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது.
காட்டுத் தீ காரணமாக இந்த மாதத் தொடக்கத்தில் நியூயோர்க் நகரம் புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், தற்போது வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பாவை அடைந்துள்ளது.
புகை அதிகளவில் இருந்தாலும் காற்றின் தரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.