இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர் வரும் 1ஆம் திகதி சனிக்கிழமையன்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வின் மூலம் , பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கண்காட்சிகளைப் பார்வையிடுவதுடன் , இசை, நடனம், பாடல் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என்பவற்றையும் கண்டுகளிக்கலாம்.
அதேவேளை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடவும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கும் பல்வேறு துறைகள் மற்றும் பாடநெறிகள் தொடர்பாக அறிந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.