கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் !

நெல்லுக்கான விலையினை அரசாங்கம் உரிய நேரத்தில் அமுல்படுத்துவதில்லை என தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் அங்கு மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகனிடமும்,நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதோடு முடிவடைந்தது.

தற்பொழுது நெல்லினை 48 தொடக்கம் 50ரூபாய்க்கு கொள்வனவு செய்வதுடன் , அறுவடை முடிவில் வரவைவிட செலவு அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை களஞ்சிய சாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதாகவும், உரிய காலத்தில் உரிய விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதில்லை எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபையினரும் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தனர்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply