கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்கவுள்ள அரச நிகழ்வை கருத்திற்கொண்டு இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, டி.எஸ்.சேனநாயக்க வீதி, முனிசிபல் கவுன்சில் சந்திப்பிலிருந்து குயின்ஸ் ஹோட்டல் வரையிலான சாலையின் நீட்சி, தலதா வீதி, தலதா வீதியில் குயின்ஸ் ஹோட்டல் சந்தியில் இருந்து கொடுகொடல்ல வீதி சந்தி வரையான வீதி நீட்சி, கொடுகொடெல்ல வீதியில் ராஜ வீதி சந்தியிலிருந்து தலதா வீதி சந்தி வரையான வீதி நீட்சி, கொடுகொடெல்ல வீதியில் உள்ள ராஜ வீதி சந்தியில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரையான பாதை வரையில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, குறித்த சாலைகளில் காலை 5.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை வீதியோரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தூதுவர்கள் பயணிக்கும் வீதிகளில் வாகன சாரதிகளுக்கு வாகனங்களை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அரச வாகனங்களின் தொடரணிகள் இருக்கும் போது வாகன போக்குவரத்து தடைசெய்யப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply