இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக ஆபத்தான வலயங்கள்!

நாட்டில் இதுவரை 31 பேர் டெங்கு தொற்று காரணமாக மரணித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48,963 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி இருப்பதாகவும் இவர்களில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 24,402 பேர் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் அதிக ஆபத்தான வலயங்களாக 61 பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply