உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைய தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவற்றை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவான்வெல்ல பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் அனைத்து ஓய்வூதிய நிதியங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அந்த கலந்துரையாடல்களின் பின்னர் மாற்று யோசனைகள் இருந்தால் பரிசீலிக்கப்படும்
இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் மக்களுக்காக வெளிப்படையாக அறிவிக்கப்படும். இது தொடர்பான வேலைத்திட்டம் நாளை அல்லது நாளை மறுதினம் தெளிவூட்டப்படும்
ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த திட்டம் முன்வைக்கப்படவுள்ளது ” எனக் குறிப்பிட்டார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பிரேரணை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றதுடன், 60 மேலதிக வாக்குளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.