இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 01 மில்லியன் ரூபா பணம் , 10,400 அமெரிக்க டொலர் மற்றும் 24 பவுண் தங்கம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி பொரலஸ்கமுவ, கட்டுவாவல மாவத்தையில் உள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி, வீட்டுப் பணிப் பெண்ணை பயமுறுத்தி, ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பெல்லாந்தோட்டை சந்தி மற்றும் மஹரகம பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 9 இலட்சத்து 25 ஆயிரம் ரொக்கப் பணமும் 23 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட 31 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றில் மூன்று திறந்த பிடியாணைகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.