கடன் மறுசீரமைப்பு – பல கோடிகளை இழக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டினால் எதிர்வரும் 2038ஆம் ஆண்டுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 12 இலட்சம் கோடி ரூபாவை இழக்க நேரிடும் என பொருளியல் துறைசார்ந்த சிரேஷ்ட நிபுணர் கலாநிதி நிஷான் டி மெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு காரணமாக ஓய்வூதிய நிதியிலிருந்து கணிசமான தொகையை இழக்க வேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதி, ஓய்வூதிய நிதி ஆகியவற்றில் கடந்த மே மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி பிணை முறிகள்மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு சராசரியாக 13.5 வீத வட்டியை அரசாங்கம் பெற்றுவந்தது. அதனை 9.1 வீதமாகக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அரச கடன்களுக்கு 13.5 வீத வட்டி வழங்கப்பட்டால் அந்த நிதியின் மதிப்பு 2038 ஆம் ஆண்டாகும்போது 25 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது அந்த நிதியின் மதிப்பு 3.456 ட்ரில்லியனாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பினால் 9.1 வீதமாக வட்டியை குறைப்பதன் மூலம் 12 ட்ரில்லியன் இழப்பை சந்திக்க நேரிடும் என கலாநிதி நிஷான் டி மெல் எச்சரித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply