இறுதி யுத்தம் முடிவுற்ற நந்திக்கடல் கடற்கரை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நந்திக்கடல் கடற்கரையும் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் முடிவுற்றிருந்தது.

இதில் பல இலட்சம் மக்கள் கொத்துக் குண்டுகளுக்கும் தோட்டாக்களுக்கும் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் நந்திக்கடல் கடற்கரையும் புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் இதுவரை இதுபோன்ற 24 இடங்களை அடையாளம் கண்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த மே மாதத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த மாதம் 1 லட்சத்து 388 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் எண்பத்து மூவாயிரத்து 309 சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வருகை தந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் இதுவரையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 24 ஆயிரத்து 874 ஆக பதிவாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply