கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.