அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையை பொதுமக்களின் போக்குவரத்திற்காக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனுராதபுர ரயில் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வின் சின்னமாக ரயில் நிலைய அமைச்சரினால் படு கரடா என கூறப்படும் செடி ஒன்று நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த நவீனமயமாக்கப்பட்ட தண்டவாளத்தின் மத்தியில் பூஜை முறைகளை முடித்து அநுராதபுரத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.