அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒருவர் தற்கொலை முயற்சி –

தனது மகளின் கன்னித்தன்மை தொடர்பில் அயல் வீட்டுப் பெண் அவதூறாக பேசியதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் முச்சக்கர வண்டியுடன் வந்த நபர் பெற்றோல் ஊற்றி தனக்குத்தானே தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடித்து தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை முயற்சியினை மேற்கொண்டவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒரு வாரத்துக்கு முன்னர், ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அதே வயதுடைய அயல் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓடிப்போனமை தொடர்பில் இரு குடும்பங்களுக்கும் இடையில் பிரச்சினை எழுந்துள்ளது.

இதனையடுத்து பெண் வீட்டார், திருமணம் செய்ய அழைத்துச் சென்ற இளைஞனின் வீட்டுக்குச் சென்று தாக்குதலை மேற்கொண்டு வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்படி, பெண்ணின் தந்தையும் மற்றும் பெரியப்பாவும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்டதையடுத்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன், பொலிஸாரால் கூறப்பட்ட மேலும் ஐவரை கைது செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, மேலும் ஐவரை அச்சுவேலி பொலிஸார் இன்றைய தினம் பொலிஸில் முன்னிலையில் ஆஜராகுமாறு பணித்திருந்தனர்.

தவறு செய்யாத நாங்கள் ஏன் முன்னிலையாக வேண்டும், எனது மகளை அவதூறாக அயல் வீட்டுக்காரர் பேசியதாகவும், இதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, முச்சக்கர வண்டியில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கானுடன் வந்த குறித்த பெண்ணின் பெரியப்பா தனக்குத்தானே பெற்றோல், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் சற்று பரபரப்பான நிலைமை காணப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply