சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் புளோடிலா அருகே சீன கடற்படைக் கப்பல்களைக் காணும் வகையில், இரண்டு அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள், பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக் கப்பல்களே தென் சீனக் கடலில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து ரியர் அட்மிரல் ஜேம்ஸ் கிர்க் நிமிட்ஸின் கூறுகையில், ‘அவர்கள் எங்களைப் பார்த்தார்கள், நாங்கள் அவர்களைப் பார்த்தோம்’ என கூறினார்.
எனினும், அமெரிக்கா தனது கப்பல்களை தென் சீனக் கடலுக்கு அதன் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றே அனுப்பியதாகவும், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
100,000 டன் எடைகொண்ட இந்த கப்பல்களில், ஒவ்வொன்றும் 90 அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களை தாங்கக்கூடியது. இதில் சுமார் 12,000 மாலுமிகள் கப்பல்களில் உள்ளனர்.
வளங்கள் நிறைந்த தென் சீனக் கடலின் ஊடாக, ஆண்டுக்கு 3 டிரில்லியன் டொலர் வர்த்தகம் கடந்து செல்கிறது.
புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகியவை தென் சீனக்கடல் பகுதிக்கு உரிமைகோருகின்றன.
இந்த பிராந்தியத்தில் சீனா இராணுவ தளங்களை கட்டியுள்ளது. ஆனால் இதன் நோக்கங்கள் அமைதியானவை என்று கூறப்படுகின்றது.