கலைக்கப்படுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் – தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதியோடு முடிவுக்கு வருகின்றது.

தேர்தலுக்கு முன்பாக தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நாட்டின் மிக முக்கிய கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திகதி இன்னும் முடிவாகவில்லை எனவும், உரிய ஆலோசனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அரசு தனது முடிவை அறிவிக்கும் என பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply