சவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன!

இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 59 வயதான தந்தையும், 55 வயதான தாயும் அவர்களது 34 வயதான மகளும் ஆவார்.

சவுதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இவர்கள் பியகம களனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -266 என்ற விமானத்தின் மூலமாகவே இந்த சடலங்கள் காலை 7.10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மூன்று சடலங்களுடன் மேலும் நான்கு சடலங்களும் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நான்கு சடலங்களும் இயற்கை காரணங்களால் இறந்தவர்களின் உடல்கள் என்று விமான நிலைய சுகாதார மருத்துவ பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மொத்தமாக இந்த 7 சடலங்களும் பிரேத பரிசோனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனையில் சவுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சடலங்களும் வெட்டுக் காயங்களுடனும், ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir