இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வயோதிப் பெண்ணின் பணத்தை இளைஞர் ஒருவர் சூறையாடியுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண், அங்கு இருந்த இளைஞர் ஒருவரிடம் இலத்திரனியல் அட்டையைக் கொடுத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை மீள பெற்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த இளைஞர் முதலில் பத்தாயிரம் ரூபா பணத்தை மீள பெற்று தான் வைத்து கொண்டு மீண்டும் குறித்த வயோதிபப்பெண் கூறிய 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா தொகையை இயந்திரத்தில் பெற்றுக்கொடுத்துள்ளார்.
குறித்த வயோதிபப்பெண், விடயம் தொடர்பில் சந்தேகமடைந்த நிலையில், பணத்தை எண்ணிக் கொண்டு இருந்த வேளையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
சந்தேக நபர்,புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த மாடசாமி கமலேஸ்வரன் எனத் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த இளைஞனை பிடித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சந்தேக நபரை கைது செய்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.