இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் பல்வேறு பட்டப்படிப்புகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பல் மருத்துவ பீடத்தில் இளங்கலைப் பட்டதாரி ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்ச தொகையாக 1 மில்லியன் 7 லட்சத்து 12 ஆயிரத்து 39 ரூபா ஒதுக்கப்படும், அதன்படி 5 வருட படிப்பு காலத்திற்கு 8 மில்லியன் 5 லட்சத்து 60 ஆயிரத்து 195 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அதிகபட்ச தொகையாக, கால்நடை அறிவியல் பீடத்தில் பட்டதாரி பரீட்சார்த்திக்கு 1 மில்லியன் 5 லட்சத்து 22 ஆயிரத்து 988 ரூபா ஒதுக்கப்படும். அதன்படி, 5 வருட பாடநெறி காலத்திற்கு 7 மில்லியன் 6 லட்சத்து 14 ஆயிரத்து 940 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவப் பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் 10 ஆயிரத்து 452 ரூபா ஒதுக்கப்படும். அதன்படி 5 ஆண்டு படிப்புக்கு 5 மில்லியன் 52 ஆயிரத்து 260 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இணை சுகாதார அறிவியல் பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு 7 லட்சத்து 20 ஆயிரத்து 252 ரூபா ஒதுக்கப்படும். அதன்படி, 4 வருட பாடநெறியின் காலத்திற்கு, 2 மில்லியன் 8 லட்சத்து 81 ஆயிரத்து 8 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் பீடத்தில் இளங்கலை மாணவருக்கு வருடத்திற்கு 7 லட்சத்து 5ஆயிரத்து 231 ரூபா ஒதுக்கப்படுகின்றது. மேலும் 4 ஆண்டு காலத்திற்கு 2 மில்லியன் 8 லட்சத்து 20 ஆயிரத்து 924 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, விவசாய பீடத்தில் இளங்கலை மாணவருக்கு 6 லட்சத்து 86 ஆயிரத்து 607 ரூபா எனவும் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் பட்டப்படிப்பு பரீட்சார்த்திக்கு 3 லட்சத்து 62 ஆயிரத்து 994 ரூபா எனவும், சட்ட பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு வருடத்திற்கு 3 லட்சத்து 12 ஆயிரத்து 460 ரூபா எனவும், இளங்கலை ஊடகம் மற்றும் நிகழ்த்துக் கலைப் பிரிவினருக்கு ஆண்டுக்கு முறையே 5 லட்சத்து 20 ஆயிரத்து 393 எனவும், 3 லட்சத்து 52 ஆயிரத்து 475 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.