இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு நாடாளுமன்றத்தில் வெளியீடு

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் பல்வேறு பட்டப்படிப்புகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பல் மருத்துவ பீடத்தில் இளங்கலைப் பட்டதாரி ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்ச தொகையாக  1 மில்லியன் 7 லட்சத்து 12 ஆயிரத்து 39 ரூபா ஒதுக்கப்படும், அதன்படி 5 வருட படிப்பு காலத்திற்கு 8 மில்லியன் 5 லட்சத்து 60 ஆயிரத்து 195  ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அதிகபட்ச தொகையாக, கால்நடை அறிவியல் பீடத்தில் பட்டதாரி பரீட்சார்த்திக்கு 1 மில்லியன் 5 லட்சத்து 22 ஆயிரத்து 988 ரூபா  ஒதுக்கப்படும். அதன்படி, 5 வருட பாடநெறி காலத்திற்கு 7 மில்லியன் 6 லட்சத்து 14 ஆயிரத்து 940 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவப் பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் 10 ஆயிரத்து 452 ரூபா ஒதுக்கப்படும். அதன்படி 5 ஆண்டு படிப்புக்கு  5 மில்லியன் 52 ஆயிரத்து 260 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இணை சுகாதார அறிவியல் பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு 7 லட்சத்து 20 ஆயிரத்து 252 ரூபா ஒதுக்கப்படும். அதன்படி, 4 வருட பாடநெறியின் காலத்திற்கு, 2 மில்லியன் 8 லட்சத்து 81 ஆயிரத்து 8 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொறியியல் பீடத்தில் இளங்கலை மாணவருக்கு வருடத்திற்கு 7 லட்சத்து 5ஆயிரத்து 231 ரூபா ஒதுக்கப்படுகின்றது. மேலும் 4 ஆண்டு காலத்திற்கு 2 மில்லியன் 8 லட்சத்து 20 ஆயிரத்து 924 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, விவசாய பீடத்தில் இளங்கலை மாணவருக்கு  6 லட்சத்து 86 ஆயிரத்து 607 ரூபா எனவும் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் பட்டப்படிப்பு பரீட்சார்த்திக்கு 3 லட்சத்து 62 ஆயிரத்து 994 ரூபா எனவும், சட்ட பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு வருடத்திற்கு 3 லட்சத்து 12 ஆயிரத்து 460 ரூபா எனவும், இளங்கலை ஊடகம் மற்றும் நிகழ்த்துக் கலைப் பிரிவினருக்கு ஆண்டுக்கு முறையே 5 லட்சத்து 20 ஆயிரத்து 393 எனவும், 3 லட்சத்து 52 ஆயிரத்து 475 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply