பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் டென்சின் லெக்பெல் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்தித்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் போது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொதுச் சுகாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், நாளாந்த அமைச்சர்கள் மட்டக் கூட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த சந்திப்பில் அதிபரின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினூக் கொழும்பகேயும் கலந்துகொண்டிருந்தார்.
வங்காள விரிகுடாவை ஒட்டிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்குவதே பிம்ஸ்டெக் கூட்டணியின் முக்கிய நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.