வட கடலில் ஏறக்குறைய மூவாயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீப் பிடித்து எரிந்ததில் டச்சுக் கடலோரக் காவல்படை ஒரு பணியாளர் இறந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து இன்று ஜேர்மனிய துறைமுகமான ப்ரெமர்ஹேவனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, டச்சு தீவான அமெலாண்டிற்கு வடக்கே சுமார் 27 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், தீ விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடம் காணப்படுவதால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கப்பலை மூழ்கவிடாமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 23 பணியாளர்கள் களமிறக்கப்பட்டபோதும், தீயணைப்பு பணிகள் தோல்வியடைந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனவும், சரக்குக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கார்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
விபத்து குறித்த விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.