இலங்கையில், 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் 40வது நினைவுதினம் மட்டக்களப்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை 10 மணியலவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில், கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளரரு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பொறுப்பாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் உப தலைவருமான கோவிந்தன்
கருணாகரம் (ஜனா), கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நினைவு நிகழ்வில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.