புதிய அண்ட்ரொய்டு செயலியை வெளியிட்ட OpenAI!

OpenAI நிறுவனம் தங்களது Chat GPT அண்ட்ரொய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

OpenAI தொழில்நுட்ப நிறுவனம் தங்களது செயற்கை நுண்ணறிவு ChatGPT 3.5 பாட்-ஐ உலகம் முழுவதும் உள்ள அண்ட்ரொய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்த Chat GPT 3.5 வெர்ஷன் ஆனது முந்தைய Chat GPT-3 வெர்சனில் இருந்து மேம்படுத்தப்பட்டது ஆகும்.

இது உலக அளவில் உள்ள அனைத்து டேட்டாபேஸ்களில் இருக்கும் தகவல்களையும் உள்ளடக்கி வைத்து இருப்பதால், மனிதர்களை போன்று குறிப்பிடத்தக்க துல்லியத்தன்மையுடன் உரையாடலை புரிந்து கொண்டு பதில் உரையை நடத்தும் மொழி மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் இந்த சாட்பாட் ஆனது மனிதர்களை விடவும் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் உரையாடல்களை நடத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் பயனர்கள் வெப் பிரவுசர்களை நாடி இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் OpenAI தொழில்நுட்ப நிறுவனம் அண்ட்ரொய்டு பயனர்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பில்லியன் கணக்கான பயனர்களுக்கு ChatGPT எளிதாக அணுகக்கூடிய அம்சமாக மாறியுள்ளது.

இது தொடர்பாக OpenAI நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் டொக்டர் எமிலி வோங் தெரிவித்துள்ள கருத்தில், அண்ட்ரொய்டு பயனர்களுக்கு இந்த GPT-3.5 ஐ அறிமுகம் செய்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் GPT-3.5-யின் மேம்படுத்தப்பட்ட புரிதல் மற்றும் பல்நோக்கு திறன் டிஜிட்டல் துறையின் புதிய சாத்தியங்களை சிறந்ததாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கும் என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply