நோர்வே தூதரகத்துக்கு இன்று முதல் பூட்டு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.

நாளை முதல், இலங்கை மற்றும் மாலைதீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பாகும் என்று தூதரகம் முன்னதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், நோர்வே அரசு, வெளிநாட்டில் உள்ள தூதரகப் பணிகளின் வலையமைப்பில் சில கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக, 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

அதன்படி, நோர்வே அரசாங்கம் 2023 இல் ஸ்லோவாக்கியாவிலுள்ள பிராட்டிஸ்லாவா, இலங்கையிலுள்ள கொழும்பு, கொசோவோவிலுள்ள பிரிஸ்டினா, மடகாஸ்கரிலுள்ள அண்டனானரிவோ மற்றும் அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் ஆகிய இடங்களிலுள்ள நோர்வே துணைத் தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்தது.

முன்னைய அறிவிப்புகளின்படி, கொசோவோ, மடகாஸ்கர், ஸ்லோவாக்கியா மற்றும் இலங்கையுடனான நோர்வேயின் இராஜதந்திர உறவுகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் கையாளப்படும் எனவும், இதற்கான பொறுப்பு அருகிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு வழங்கப்படும் அல்லது நோர்வேயை தளமாகக் கொண்ட ஒரு தூதர் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply