ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்ஸி கர்டிஸ், என்ற சிறுமி, பிக்ஸியின் ஃபிட்ஜெட்ஸ் என்ற பொம்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
இளம் கோடீஸ்வரராக இருக்கும் பிக்ஸி, தற்போது ஒவ்வொரு மாதமும் $133,000க்கு மேல் சம்பாதிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிக்ஸியின் தாய், ராக்ஸி ஜசென்கோ தனது மகளுக்கு 12வது பிறந்தநாளில் ஒய்வு விழாவைத் திட்டமிடும் யோசனையை வழங்கி உள்ளார். வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தனது மகளுக்கு அவர் கற்பித்துள்ளார்.
எனவே தற்போது படிப்பில் கவனம் செலுத்துவதற்காக பிக்ஸி தனது தொழிலில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்து ஒரு வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பிறந்தநாள் விழாவின் போது, விருந்தினர்களுக்கு $50க்கு மேல் மதிப்புள்ள அழகு சாதன பொருட்கள் அடங்கிய பைகளை பரிசாக வழங்கி உள்ளார்.
பிக்ஸி கர்டிஸ் கொரோனா காலகட்டத்தின் போது ஃபிட்ஜெட் ஸ்பின்னர் வணிகத்தைத் தொடங்கினார். மேலும் பிக்ஸி கர்டிஸ் அடிக்கடி தனது ஆடம்பரமான, விலையுயர்ந்த வாழ்க்கை முறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறார், அவருக்கு இன்ஸ்டாவில் 130,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்” என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த பணக்கார சிறுமி மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார், இருப்பினும் அவரால் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட முடியாது. விலை உயர்ந்த கார் அவரது 10வது பிறந்தநாளில் அவரது தாயிடமிருந்து பரிசாக கிடைத்தது. எனினும் இன்ஸ்டாவில் சில பயனர்கள் பிக்ஸியின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றி கவலை தெரிவித்தனர். “போய் குழந்தையாக இரு. நீங்கள் வயது வந்தவராக இருக்க முயற்சிப்பதை தவிர்க்கலாம் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.