ஆஸ்திரேலியாவில் 91 இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பராமரிப்பு ஊழியர்

அவுஸ்திரேலிய முன்னாள் குழந்தை பராமரிப்பு ஊழியர் ஒருவர், 91 இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதை படம்பிடித்து, ஒன்லைனில் விநியோகித்ததாகக் கூறப்படும் 1,600 க்கும் மேற்பட்ட குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள 12 மையங்களில் 15 வருடங்களாக இளம் பெண்களை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் 2022 இல் கைது செய்யப்பட்ட போதிலும்  பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் பெண்களை விசாரித்து அடையாளம் காண பொலிஸாருக்கு ஒரு வருடம் ஆனது.

தாங்கள் இதுவரை கண்டிராத கொடூரமான வழக்குகளில் இதுவும் ஒன்று என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

45 வயதான அந்த நபர் 246 வன்புணர்வு மற்றும் 673 குழந்தைகளுக்கு எதிரான அநாகரீகமான தாக்குதல்களை  மேற்கொண்டமை தொடர்பான குற்றங்களை எதிர்கொள்கிறார் எனவும் அவற்றில் பல மோசமான சூழ்நிலைகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவரது மின்னணு சாதனங்களில் 4000 படங்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை குயின்ஸ்லாந்தில் உள்ள பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புலனாய்வாளர்கள் செயல்பட போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி பிரிஸ்பேன் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply