ஜப்பானிய நபர் ஒருவர் சுமார் 20,000 அமெரிக்க டொலர் செலவிட்டு, தம்மை ஒரு நாய் போன்று உருமாற்றிக் கொண்டுள்ளார்.
தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்துள்ள அந்த நபர், கடந்த ஆண்டு இது தொடர்பில் அறிவிப்பு வெளியிட, ஊடக வெளிச்சம் பெற்றார். அத்துடன், நாய் போன்ற உடைகளை வடிவமைக்க, நிறுவனம் ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.
டோகோ என தம்மை அறிமுகம் செய்துள்ள அந்த நபர், முதன்முறையாக நாய் போன்ற வேடத்தில் தெருவில் சென்ற சம்பவத்தை பதிவு செய்து தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் தமது சிறுவயது கனவை தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும், ஒரு மிருகமாக மாற வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு எனவும் டோகோ தெரிவித்துள்ளார். அந்த காணொளியில், வளர்ப்பு நாய்களுடன் செல்லும் மக்கள் டோகோ உடன் உரையாடுவதும்,
சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், சிலர் பாசமாக டோகோவின் முதுகில் தட்டுவதுமாக உள்ளனர். தமது அடையாளத்தை வெளிப்படுத்த மறுக்கும் டோகோ, மக்கள் தன்னை நியாயந்தீர்ப்பார்கள் என்ற பயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனது பொழுதுபோக்குகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவை இல்லை, அதுவும் தாம் பணியாற்றும் சக ஊழியர்களுடன் என கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் செப்பேட் நிறுவனம் சுமார் 40 நாட்கள் எடுத்துக்கொண்டு, 17 லட்சம் செலவில் டோகோ விரும்பியவகையில் நாய் உடையை வடிவமைத்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.