சுமந்திரனை தோற்கடிப்பது வரலாற்று தவறு – புத்திஜீவிகள் எச்சரிக்கை

சுமந்திரனை தமிழ் அரசியற் பரப்பிலிருந்து முற்றாக வெளியேற்ற தமிழ் தேசியக் கூட் டமைப்புக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரப்பிலிருந்தும் பகீரத பிரயத்தனம் நிகழும் இவ்வேளை அவரைக் காப்பாற்ற சில புத்திஜீவிகளும் முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர்களும் சமூக ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் சுமந்திரனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

அந்தவகையில் பிரபல தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மீக பேச்சாளர்’கம்ப வாரிதி’ ஜெயராஜ் உகரம் இணையதள பத்திரிகையில் வரைந்த அரசியல் கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .

அதில் அவர் போர் முடிந்த காலத்திலிருந்து எம் இனம் நோக்கி நீட்டப்பட்ட,
உலக நாடுகளின் துணை க்கரங்களைபற்றி,இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே மனிதனாய், இன்றுவரை செயற்பட்டு வருகிறார் சுமந்திரன்.

அவர்களோடு சமதைப்பட்டு உட்கார்ந்து பேசும் சட்ட அறிவு, சமயோசிதம், விட்டுக் கொடுத்தல், தந்திரம் என,அனைத்துத் தகுதிகளும் அவரிடம் நிறைந்து கிடக்கின்றன.

உலக நாடுகள் என்றில்லை, நம் நாட்டின் பேரினவாதத் தலைவர்கள் கூட, தமிழர் நலம் பற்றிப் பேசுவதானால் சுமந்திரனோடுதான் பேசி வருகிறார்கள்.இதுதான் யதார்த்தநிலை.

உண்மையைச் சொல்லப்போனால்,நமது மற்றைய தலைவர்களெல்லாம் வெறும் போடுதடிகள் போலத்தான்.
உலகநாடுகளிடமும் பேரினத்தலைவர்களிடமும்,சுமந்திரனுக்குச் சமமான செல்வாக்கு எமக்குமுண்டு.’

‘சுமந்திரனுக்கு இருக்கக்கூடிய சட்டஅறிவு, ஆளுமை எமக்குமுண்டு’ என்று,துணிந்து பேச இன்றைய தமிழ்த்தலைவர்கள் எவர்க்கேனும் தகுதி உண்டா?சிலர் வீம்புக்காக ‘உண்டு’ என்பார்கள். அது உண்மையானால்,ஏன் இதுவரை மேற்சொன்னவர்களில் ஒருவரும் உங்களைத் திரும்பியும் பார்க்கவில்லை,
‘சரக்கிருந்தால் மிடுக்கு இருக்கும்’ என்பது பழமொழி.

சுமந்திரனை ஒழிக்க நினைக்கும் தலைவர்களிடம் சரக்குமில்லை மிடுக்குமில்லை.
ஆசையும் சுயநலமும் மட்டும்தான் அளவுக்கு அதிகமாய் இருக்கிறது.

அதைத் தகுதியாய் வைத்து மக்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள்.
‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்பார்கள், எவ்வளவு பெரிய உண்மை.

சுமந்திரனின் யதார்த்தத்தை வெகுசன விரோதமாக்கும் இத்தலைவர்தனைக் காண,
அருவருப்பாக இருக்கிறது என்று நீளும் அந்தக்கட்டுரை பின்வரும் எச்சரிக்கையோடு நிறைவு பெறுகிறது நிறைவாக ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன்.

இன விடுதலைப்போர் நடந்த காலத்தில்,பிரபாகரனுடைய இருப்பு எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ,இன்றைய அரசியல் சூழ்நிலையில் சுமந்திரனது இருப்பும், இனஒற்றுமையும்,அந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உண்மையை நிராகரிப்பவர்களே இனத் துரோகிகளாம்.
மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.

You May Also Like

About the Author: kalaikkathir