யாழ்.சுழிபுரம் முருகன் கோயில் பௌத்த மயமாகிறதா? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம், சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து, புத்தர் சிலைகளை நிறுவி, முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது.

அதேவேளை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி தேரர்கள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்தனர்.

இதற்கு  பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தனர். இந்நிலையிலையே தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply