தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்தால் 04 ஆசனம் சுலபம்- இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் அவர்களின் அழைப்பை ஏற்று மேற்படி விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் உபதவிசாளர் கா.ராமச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் சிறு மக்கள் சந்திப்பும் அங்கு இடம்பெற்றது.

இதன் போது இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விதத்தினை கடுமையாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். 04 பிரதிநிதிகள் பெற வேண்டிய இந்த மாவட்டத்தில் மக்களின் வாக்களிப்பு வீதக் குறைவினால் 03 பிரதிநிதிகளை மாத்திரமே பெறக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலையினை அனைவரும் ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். திருகோணமலையில் சுமார் 85 வீத்திற்கு மேல் மக்கள் வாக்களிக்கையில் மட்டக்களப்பில் அது வெகு குறைவாகவே இருக்கின்றது. வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கான வாக்களிப்பினை அதிகரிக்கச் செய்யுமிடத்து 04 ஆசனம் கிடைப்பதென்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir