எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மேலும், அவ்வாறான வருகைகள் பற்றிய எந்தவொரு தகவலும் அந்தந்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது,ஜனாதிபதி செயலக பணியாளர்கள், அவருடன் செல்பி எடுத்தது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பணியாளர்களால் எடுக்கப்பட்ட செல்பிக்களை வெளியிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.