இலங்கை – ஈரான் இடையே ஆரம்பமாகவுள்ள பண்டமாற்று!

ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை இந்தமாதம் முதல் பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது.

2012ம் ஆண்டு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின் படி, தேயிலை ஏற்றுமதிக்காக 2021ம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகள் காரணமாக அது தாமதமாகியது.

இந்த விடயம் தொடர்பில், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்த பின்னர், தேயிலை ஏற்றுமதிக்கு தேவையானவற்றை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்படப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.

பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ், 48 மாத காலப்பகுதியில் மாதாந்த அடிப்படையில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை உத்தேசித்துள்ளது.

இந்த ஏற்பாடு ஈரானுக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள 251 மில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் பட்டியலைத் தீர்ப்பதற்கான நோக்ககமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply