இராவணன் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சரத் வீரசேகர!

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இராவண மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவில் இருந்து விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குறியாக உள்ளன என தெரிவித்துள்ளார்.

மன்னர் ஆட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராவண மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இராவணனின் படை கொடியில் சிங்கத்தின் சின்னம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால்தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராவணன் சிங்கள தலைவரே என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply