கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடிந்தவரை அனைத்தும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் படி குறித்த பரிசோதனைக்கான நடடிவக்கை களை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களை அடை யாளம் காணுதல், அவர்களின் நண்பர்களையும், நெருங்கிய தொடர்புடையவர்களையும் அடையாளம் காணுதல் அவர்களை சுய- தனிமைப்படுத்தல் நிலையங் களுக்கு அனுப்பிவைத்தல் , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புடைய பகுதிகள் மற்றும் இருப்பிடங்களை விரைவாக அடையாளம் காண நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை மற் றும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கும் போது கோவிட் 19 கொரோனா குறித்து தவறான பிரச்சாரங்களை ஒரு சிலர் பரப்புவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு முறைகளில் தவறான தகவல்கள் சமூகமயமாக்கப்படுவதினால் நாட்டில் பல்வேறு நிறு வனங்கள் மூடப்பட்டு வருகின்றமையை காணலாம்.
இந்த சூழ்நிலையில், அரசாங்கம் விடுமுறை நாட்களை அறிவித்து ஊரடங்கு உத்தரவு விதிக்கப் போகிறது என்றும் பல்வேறு தவறான தகவல்களை பல்வேறு கட்சி களால் தொடர்ந்து சமூகங்களுக்கிடையில் பரப்பி வருகின்றமை காணக் கூடியதாக உள்ளது.
இருப்பினும், இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப் பட வில்லை என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற தவறான தகவல்களை சமூகத் தில் பரப்புவதன் நோக்கம் மக்களைத் தவறாக வழிநடத்து வதும், சமூகத்தில் தேவையற்ற இடையூறுகளை உருவாக்குவது தெளிவாகத் தெரிகின்றது.
இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை பரப்புவர்கள் மீது முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தி யுள்ளது.
இங்கே, நபர் ஒருவர் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மற்றும் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டிய அனைத்து விடயங்களையும் உத்தியோகப்பூர்வமான தகவல்களை உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க அரசு தகவல் திணைக்களம் அரசு சார்பாகச் செயற்படும்.
எனவே, தவறான பிரச்சாரத்தால் ஏமாற வேண்டாம் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் புரிதலுடன் அனைத்து சுகாதார வழிகாட்டிகளையும், குறிப்பாகச் சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்படும் போது தந்திரோபாயங்களை கண்டிப் பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாகவும் விவேகமாகவும் செயற்படுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.